தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது இந்த நிலையில் தற்போது 2022 – 2023 ஆம் நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்.
தற்போது விவசாயிகள் இந்த சேவை பயன்படுத்த தொடங்கி இருப்பதால் இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே அனைத்து பயன்களும் வழங்க முடியும். இதனால் விவசாயிகள் http:/tnhorticulture.tngov.in/tnhortnet/registration-new.php எனும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து பதிவு செய்ய தெரியாத அல்லது பதிவு செய்ய முடியாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.