நாடு முழுவதும் கொரோனா தாகம் காரணமாக புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தாமதமாகி வருகின்றது. அதன்படி இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான கல்வி நாட்காட்டியை நிறுத்தி வைத்திருந்தது. மேலும் புதிய காலண்டர்படி முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை அக்டோபர் 1ஆம் தேதி துவங்கும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் படிப்புகளை நடத்துவதற்கும், தொலைதூரக்கல்வியில் படிப்புகளை நடத்துவதற்கும் AICTE-யிடம் தடையில்லா சான்று பெறவேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. UGC-இன் அனுமதி இருந்தாலும், AICTE-யிடம் NOC பெறுவது கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.