கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வகுப்பு தொடங்குவதற்கு முன்னதாக பத்து நிமிடங்கள் கட்டாயம் தியானம் செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சர் பி சி நாகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தத்தை குறைத்து செறிவு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்கள் தினமும் தியானம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சில பள்ளிகளில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் இது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தியானம் என்பது மதப்பழக்கம் அல்ல கோவிலுக்கு பிறகு குழந்தைகள் கவனத்தையும் நினைவாற்றலையும் இழந்துள்ளார்கள். செல்போன்களுக்கு அடிமையாகி உள்ளார்கள். இதனை சரி செய்வதற்கு குழந்தைகளுக்கு தியானம் செய்ய பலர் பரிந்துரைத்துள்ளனர் .நல்ல யோசனையை சிலர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக கைவிடக்கூடாது என்று கூறியுள்ளார்.