கோவை மாவட்ட பள்ளிகளில் மாணவ மாணவிகள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் முடிந்த பிறகு மாலை 5.30 மணிக்குள் மாணவர்களை வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவதை முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். பள்ளி பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் மற்றும் அவை இயங்குவதை பள்ளியின் முதல்வர் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆஃப்லைன் வகுப்பின் போது ஆசிரியைகள் உடனிருப்பதை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைகள் உதவி மைய எண் 1098, பெண்கள் உதவி தொடர்பு எண் 181 ஆகியவை பள்ளிகளில் ஒட்டப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
Categories