நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வரும் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் அனைத்து பள்ளிகளையும் மே 15ஆம் தேதி வரை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 10 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மே 20ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் லக்னோ, அலகாபாத், வாரணாசி, கோரக்பூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை பொது முடக்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.