Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும்…. இன்றே கடைசி தேதி…. மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் ஆக இன்றைக்குள் ஆசிரியர்கள், பணியாளர்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |