திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆனி தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய ஏப்ரல் 17ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களும் வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.