சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அவனேஷ் குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குடும்ப பிரச்சனை காரணமாக விமானியான எனது மகனை அவரது மாமனார், மைத்துனர் போன்றோர் கடந்த 2019 ஆம் வருடம் தாக்கியுள்ளனர். இது பற்றிய அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக எதிர் தரப்பினர் அளித்த புகாரின் பேரில் எனது மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது மனித உரிமை மீறலாகும் அதனால் அப்போதைய அருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், அண்ணாநகர் உதவி போலீஸ் கமிஷனர் குமரேசன் போன்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் குணசேகரன், ஜெகதீசன் போன்றோர் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ளவில்லை என்பது தெரிகின்றது. அதனால் மனுதாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இதில் 4 லட்சத்தை போலீஸ் அதிகாரி குணசேகரனிடம் இருந்தும், 6 லட்சத்தை இன்ஸ்பெக்டர் ஜெகதீசனிடம் இருந்தும் வசூலித்துக் கொள்ளலாம். மேலும் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மீது ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் சட்ட ஒழுங்கு பிரிவில் நியமிக்க கூடாது போலீசார் சட்டத்தின் பாதுகாவலர் என்பதை கருத்தில் கொண்டு நேர்மையாக செயல்பட வேண்டும். இந்த உத்தரவை அனைத்து போலீசாரும் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.