அசாம் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்கள் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
அசாம் அரசு, மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த வருடம் “அசாம் ஆரோக்கிய நிதி” என்ற சுகாதார திட்டத்தின் கீழ் நிதி வசூலிக்கபட்டிருந்தது.
அதன்மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்பூசிகள் சுமார் ஒரு கோடி டோஸ்கள் ஆர்டர் செய்திருப்பதாக கூறியுள்ளது. இதேபோன்று உத்தர பிரதேசத்திலும் வரும் மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து மூன்றாம் கட்ட தடுப்பு செலுத்தும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அன்றிலிருந்து 18 வயதுக்கு அதிகமான அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.