கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் போடப்படாது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலையில் சர்வதேச வல்லுனர்கள் தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான தடுப்பூசி சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில் சில நிறுவனங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க நிறுவனமான மாடெர்னா தங்களது தடுப்பூசி 100% பலன் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கான விலையையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல் இந்தியாவில் உருவாகும் தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையில் உள்ளது. தடுப்பூசி வந்துவிட்டால் யாருக்கெல்லாம் போடப்படும் என்று கேள்வி எழுந்தது. பாதிப்புக்குள்ளானவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு முதலில் போடப்படும் என்று கூறப்பட்டாலும், அனைவருக்கும் தடுப்பூசி இந்த தகவலை பரவத்தொடங்கியது. இதனை சில கட்சிகள் சாதகமாக பயன்படுத்தி தேர்தல் அறிக்கையாக தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த செய்தி அனைத்து இடங்களிலும் பரவ, தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் போடப்படாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் நோக்கம் வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பது தான். வைரஸ் பரவும் பாதிப்பு உள்ள மக்களுக்கு தடுப்பூசி போட்டு, பரவல் என்னும் சங்கிலியை உடைக்க முடிந்தால், ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். மேலும் ‘ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போடுவது என்பது குறித்து ஒருபோதும் அரசு பேசவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்’ என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷணம் உறுதிப்படுத்தியுள்ளார்.