இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்தும் ஐபோன் பயனர்கள் இனி 5ஜி சேவையை பயன்படுத்த இயலும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபோன் 12 மாடலுக்கு மேற்பட்ட அனைத்து மாடல் ஐபோன்களிலும் 5ஜி சேவையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் சோதனை அடிப்படையில் தொடங்கிய இந்த சேவை தற்போது பயன்பாட்டிற்கு வரவுள்ளது.