Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீருடை விதி தான்…. அதிரடி அறிவிப்பு…!!!!

இஸ்லாமிய பெண்கள் தன்னுடைய முகத்தில் அணிந்துகொள்ளும் ஹிஜாப்  என்னும் ஒருவகை துணியை அணிந்துகொண்டு கல்லூரிக்குள் நுழைவதற்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள சில கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனால் இஸ்லாமிய மாணவியர்கள்  கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இவ்வாறு, கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு சில கல்வி நிலையங்கள் அனுமதி மறுத்துவரும் நிலையில் ஒரே சீருடை விதியைப் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் சட்டம்-ஒழுங்கை பாதிக்காத வகையில் கல்லூரி மாணவர்கள் உடை அணிய வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளும் மாநில அரசு அறிவித்துள்ள சீருடை விதியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |