கொரோனா தடுப்பூசி போட்டதாக போலி சான்றிதழ் தரும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மருத்துவ சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் பெறுவதற்காக மக்கள், புரோக்கர்கள் அல்லது ஏஜெண்ட்களை அணுகுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை.அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் பொது சுகாதார துறை உத்தரவு. பொதுமக்கள் புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக தொடர்பு எண்கள் அறிவிப்பு. pic.twitter.com/x93IvTXsN3
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) December 6, 2021
சிலர் தங்கள் ஆதார் எண்களை நண்பர்கள் அல்லது தெரிந்த களப்பணியாளர்களிடம் கொடுத்து தடுப்பூசி செலுத்தி கொண்டதாக முறைகேடாக சான்றிதழ்களை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பொது மருத்துவ சுகாதாரத் துறை இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியாக புகார் அளிப்பதற்கு ஏதுவாக புகார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்பு கொண்டு மக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.