நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவது ஒரு பக்கம் இருந்தாலும் கொரோனா ஒரு பக்கம் மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
இந்நிலையில் அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்கள், மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்துகள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.