Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. அதிரடி உத்தரவு…!!!

கொரோனாவால் இறந்த நோயாளிகளுக்கு இறப்பு மற்றும் சட்ட வாரிசு சான்றிதழை தாமதமின்றி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்படும் போது அவர்களுடைய பெயர் முகவரி ஆகிய விவரங்களை முறையாக பதிவுசெய்யப்படவில்லை.

இதனால் நோயாளிகளுக்கு மரணம் ஏற்படும்போது மரணச் சான்றிதழ்கள் மற்றும் சட்ட வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு உறவினர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவது அரசின் கவனத்துக்கு வந்த நிலையில் அரசு பலமுறை இது தொடர்பாக அறிவுறுத்தியும் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே இந்த விஷயத்தை ஆராய்ந்து இறந்தவர்களுடைய சரியான விவரங்களை பதிவேற்றவும், இறப்பு சான்றிதழ் மற்றும் சட்ட வாரிசுசான்றிதழ் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |