Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பண்டிகை காலங்கள் வர இருப்பதால், விழாக்களை பொதுமக்கள் எளிய முறையில் தங்கள் வீடுகளில் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசி போடும் பணியை திட்டமிட்டு துரிதப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் 20 லட்சம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதிகப் பேர் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், ஆர்டிபி சி ஆர் பரிசோதனைகளை அதிகரிக்கவேண்டும். அதுமட்டுமன்றி வரும் 12ஆம் தேதி நடத்தப்படும் மெகா முகாமில் 18வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சென்னை மாநகராட்சி மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |