தமிழகம் முழுவதும் 2748 கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் இருப்பதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த காலி பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறல்களும் இல்லாமல் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14ஆம் தேதி பரிசீலனை செய்து முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19ஆம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19ஆம் தேதி வெளியிட்டு அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்..