Categories
மாநில செய்திகள்

அனைத்து ரயில்களிலும் இனி…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் உட்பட 192 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் முன்புபோல பதிவு இல்லாத பெட்டிகளை பயணிகள் பயணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு முன் அனைத்து ரயில்களும் முன்பதிவில்லாத பெட்டிகள் இருந்தன. ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 அல்லது 5 பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா காலத்திற்கு பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப் பட்டிருந்தது.

முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் நீக்கப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்போர் அனைவரும் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரான பாதிப்பு குறைய தொடங்கி வருகிறது. இதையடுத்து அனைத்து ரயில்களும் முன்புபோல இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளை முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளாக இயக்கும்படி ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் உட்பட மொத்தம் 192 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில்வே கூட்டத்தில் இருந்து புறப்படும்யஷ்வந்த்புர் மற்றும் ஹூப்ளி ரயில்கள் இயக்கப்படும்.  இதனையடுத்து நாகர்கோவில், முத்துநகர், உழவன் விரைவு ரயில்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முன் பெட்டிகள் இணைக்கப்படும். ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் நெல்லை, குமரி, பாண்டியன், பொதிகை, ராமேஸ்வரம், உள்ளிட்ட ரயில்கள் முன்பதிவில்லாமல்  பயணிக்கலாம். இதனால் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படுவதற்கு முன்பு அரை மணி நேரத்திற்கு முன்னதாக சென்று கூட முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெற்றுக்  கொண்டு பயணிக்க வசதிகள் இனிமேல் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |