Categories
தேசிய செய்திகள்

அனைத்து ரயில் நிலையங்களிலும்…. வை-பை வசதி பெற…. சூப்பர் திட்டம் அறிமுகம்…!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் அனைத்தையும் நவீன முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் பயணிகளுக்காக இலவசமாக வைபை எனப்படும் இணைய வசதி சேவைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு மும்பை ரயில் நிலையத்தில் இந்த இணைய வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வழங்கும் திட்டத்தில் 6000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி அமல்படுத்தப்பட உள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரயில் நிலையங்கள் இந்த சேவையை மேலும் விரிவுபடுத்தவும் மக்கள் பயன்பாட்டிற்கு அகண்ட அலைவரிசை மேலும் பரவலாக்கவும் “பிரதமர்-வானி” என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறை அனைத்து வை-பை சேவைகளையும் இணைக்க இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதை செயல்படுத்த ரயில்டெல் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 100 ரயில் நிலையங்களில் பொது வை-பை சேவைகளை பயன்படுத்த பிரதமர்-வானி திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டது.

Categories

Tech |