அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களும் வன்முறை சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களுக்குள் புகுந்து ரயில்களை தீயிட்டுக் கொளுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் இருக்கின்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் தற்போது நிறுத்தப்படுவதாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ரயில் நிலையங்களில் வன்முறை சம்பவங்களை தடுக்கும் நோக்கத்திலும் பாரத் பந்தின் போது எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்திலும் தெற்கு ரயில்வே இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக அக்னி பாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பாக பாரத் பந்த் எனப்படும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் 500 ரயில்களை மத்திய ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.