இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ரயில் பயணமே சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயிலில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இன்று ஆகஸ்ட் 1 முதல் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கேட்டரிங் கடைகளில் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. பயணிகளிடம் அதிக விலைக்கு உணவுகள், தண்ணீர் பாட்டில்கள் விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து இந்த முடிவை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது. இதன் மூலம் பொருட்களை உண்மையான விலையில் விற்க முடியும். பயணிகளுக்கு பில்கள் கொடுக்கப்படும். கடைகள் இந்த விதியினை மீறினால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.