தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை பதிவு நடைமுறையில் உள்ளது. அவ்வாறு கைரேகை பதிவு செய்தால் மட்டுமே குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலானோருக்கு கைரேகை பதிவு செய்வதில் பிரச்சினை எழுகிறது. அதனால் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சினை இருந்தாலும் பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கைரேகை பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் OR Code- ஐ ஸ்கேன் செய்து ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் அல்லது குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்து பொருள்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.