Categories
தேசிய செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000…. புதுச்சேரி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறப்பு வீதங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கின் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்களுடைய வாழவதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 3000 வழங்க அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். முன்னதாக தமிழகத்திலும் கொரோனா நிதியாக ரூ.4000 அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக ரூ.2000 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |