புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இலவச அரிசி மற்றும் சர்க்கரை ஆகியவை ரேஷன் கடைகளில் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ம் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழும்பியது.
இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் ரங்கசாமி,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இலவச அரிசி மற்றும் சர்க்கரை ஆகிய பொருள்களை வாங்கி வழங்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது.கூடிய விரைவில் அறிவித்தபடியே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.