Categories
தேசிய செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு….புதிய விதிமுறைகள் அமல்….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

 

இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு நியாயவிலை  கடைகளின் மூலம் மாதந்தோறும் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றனர். தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உதவும் வகையில் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு, ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மற்ற மாநில ரேஷன் அட்டைதாரர்களும் பயோமெட்ரிக் முறையில் தாங்கள் வசித்து வரும் மாநில ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை, மக்கள்  பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில் வசதிப்படைத்தோர் ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளதால் தகுதியற்றவர்கள், ரேஷன் பொருட்களை  வாங்குவதை தவிர்க்கும் வகையில், அவர்களின் ரேஷன் கார்டை ரத்து செய்ய வேண்டும். இதனை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் பிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் மற்றும் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் ரேஷன் அட்டையை  ரத்து செய்யப்படும். இவ்வாறு உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு, ரேஷன் கார்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய விதிமுறைகளின் படி ரேஷன் கடைகளில் தகுதி உடைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் அளவும் மாறக் கூடும். எனவே மாநில அரசுகள் அளித்துள்ள பரிந்துரைகளை மனதில் கொண்டு, புதிய தரநிலைகள் தயாரிக்கப்பட்டு, விரைவில் இறுதி செய்யப்படும். இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள தகுதியற்ற மற்றும் போலியான ரேஷன் கார்டுகளை கண்டறிந்து, அதை ரத்து செய்யவும் அதிகாரிகள் பரிசீலித்து வருகிறது. இவ்வாறு உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |