தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு குறைவாக கடன் பெற்றவர்களின் நகை கடன் தள்ளுபடி செய்யப் படுவதாக சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது. கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடனிலே பிறந்து, கடனிலே வளர்ந்து, கடனோடு வடிவம்தான் விவசாயி என்பது ஒரு நிதர்சனமான உண்மையாகும். வேளாண் பெருமக்கள், காலத்தே விவசாய பணிகளை மேற்கொள்ள தேவையான பயிர்க்கடனை,கூட்டுறவு கடன் சங்கங்கள் தனது உறுப்பினர்களுக்கு வழங்குவோம்.
கூட்டுறவு கடன் சங்கங்கள் பருவகாலங்களில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவதற்காக தேவைப்படும் நிதியை இருப்பில் வைத்து இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள்,தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என்று பொதுமக்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் 5 பவுன் நகை அடமானம் வைத்து நகை கடன் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும்,நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு உடனே 5 பவுன் வரை அடமானம் வைத்து வாங்கிய நகை கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று பேசினார் தற்போதைய முதல்வர் ஸ்டாலின். இவர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் அனைவரும் கூட்டுறவு வங்கிகள்,தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் அடமானம் வைத்து நகை கடன் பெற்றுள்ளனர். ஆனால் தற்போது கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி என்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி பற்றி எந்த விவரமும் இதில் இல்லை.எப்போதும் போல் அதிமுக அரசு கூட்டுறவு சங்கங்களிடம் பயிர் கடன் வழங்க தேவையான அளவு நிதி உள்ளது என்று தெரிவிக்கிறது.ஆனால் உண்மையில் கூட்டுறவு கடன் சங்கங்கள் இடம் விவசாயிகளுக்கு வழங்க போதுமான நிதி இல்லாததால் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளிலும் 5 சவரன் வரை அடமானம் வைத்து பெறப்பட்டவை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று பழனிசாமி கூறியுள்ளார்.