இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கிக்கு செல்வதை விட அதிகமாக ஏடிஎம் மையங்களிலேயே பணத்தை எடுத்து வருகிறோம். ஏடிஎம் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்திலும் நாம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வங்கி கணக்கு இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும், வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மாதத்திற்கு இவ்வளவுதான் என்ற கட்டுப்பாடும் உள்ளது.
இந்த நிலையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வரவிருக்கிறது. வங்கி கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு 5 முறையும், மற்ற வங்கியில் பணம் எடுக்க மெட்ரோ நகரங்களில் மூன்று முறையும், மற்றவற்றில் 5 முறையும் இலவசமாக பணம் எடுக்கலாம். அதிகமாக பணம் எடுக்கும் போது கூடுதல் கட்டணம் ரூ.20 இலிருந்து ரூ.21 செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.