ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு வரவேற்பு அளிப்பதாக ஜெ தீபா கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று வாரத்திற்குள் அதனை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிப்பதாக ஜே.தீபா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இது சாதகமான தீர்ப்பு ஆகும் இது நியாயப்படி சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பு என அவர் கூறியிருந்தார். மேலும் இந்த வழக்கு நியாயப்படி நடைபெற்றது இதற்காக அதிகம் நாங்கள் போராடவில்லை எனக்கூறியவர் அதிகம் பேர் எங்களை எதிர்த்தனர் எனக் கூறியிருந்தார்.
மேலும் பேசிய தீபா வேதா இல்லத்தின் சாவியை பெறுவதோடு எங்கள் கடமை முடிந்துவிடாது அதற்கு இன்னும் நிறைய சம்பிரதாயங்கள் உள்ளன என கூறினார். மேலும் பேசிய அவர் வேதா இல்லத்தை அதிமுகவின் கோயில் என சில அமைச்சர்கள் கூறியுள்ளனர். அது அவர்களின் உணர்வு அதை நான் எதுவும் புண்படுத்த விரும்பவில்லை எனக் கூறினார். மேலும் அதன் மீது உரிமை எடுத்துக் கொள்வதற்கு தான் அவர்களுக்கு அதிகாரம் கிடையாது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சட்டரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து அனைத்து சம்பிரதாயத்தை யும் முடித்து வைத்த பின்னர் வேதா இல்லம் செல்வோம் என கூறினார்.