முட்டை ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 4
சிறிய வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகு, சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து நன்கு அடித்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
அடித்து வைத்துள்ள முட்டையில் மஞ்சள்தூள், மிளகு, சீரகத் தூள்,நறுக்கிய வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு முதலியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து தோசைகளாக ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறினால் சுவையான முட்டை ஆம்லெட் ரெடி.