எமது டிஜிட்டல் இல்லங்கள் திட்டத்தின் அவசியத்தை உணர்கிறேன் என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எமது ‘டிஜிட்டல் இல்லங்கள்’ திட்டத்தின் அவசியத்தை உணர்கிறேன். பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. அதனால் கிராமத்துப் பிள்ளைகள் பிளாக் டவுனின் ஆன்லைன் வகுப்புகளைத் தொடர முடியவில்லை. கல்வி என்னும் அடிப்படை உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது. அதனால் அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்