நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருணா பரவலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக டிசம்பர் மாதம் PHH மற்றும் AAYரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்புக்கு பதில் 5 கிலோ முழு கொண்டைக் கடலையும், NPHH அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பை இலவசமாக வழங்கவும், மற்ற பொருட்களை வழக்கம்போல் வழங்கவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.