Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி… தமிழக முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் விழாக்காலங்களில் கொரோனா அதிகரிக்காமல் கட்டுக்குள் உள்ளது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. மாநிலத்தின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் கூட இந்தியாவிலேயே அதிக படியான முதலீடுகளை ஈர்க்கபட்டுள்ளது. தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |