இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதி வழங்கும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா நோயால் மரணம் அடைந்த அனைவருக்கும் இழப்பீடு தர நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஒருவேளை நடவடிக்கை தேவைப்பட்டால் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்துள்ள வழக்கில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.