தொழிலாளர் நலத் துறை சார்பாக வண்டலூர் தனியார் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. இளைஞர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை என்பதே அரசின் இலக்கு என தெரிவித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை மேம்படுத்த விரும்பும் வேலைக்கு மாணவர்களை தயார் படுத்தி வருகிறோம். ஆட்சிக்கு வந்த பிறகு 36 பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள் 297 சிறிய முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.41,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் 513 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது பெருமை என்று கூறியுள்ளார்.
Categories