ரெடிமேட் மினி பூரி – தேவைக்கேற்ப
புதினா – 2 கைப்பிடி
கறிவேப்பிலை – 2 கைப்பிடி
கொத்தமல்லி - 2 கைப்பிடி
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகு – 9
பூண்டு – 2 பல்
உருளை – 4
கொண்டைக்கடலை – சிறிது
வெங்காயம் – 2
மிளகாய்த் தூள் – கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
முதலில் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் அரைத்த விழுதுடன் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். உருளைகிழங்கு மற்றும் கொண்டைக்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து மினி பூரிகளை எடுத்துக் கொள்ளவும். உருளை, கொண்டைக்கடலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு பிசையவும். விரும்பினால் கொத்தமல்லியும் சேர்க்கலாம்.
பிறகு அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். பூரிகளின் மேல் பகுதியில் சிறு ஓட்டை போட்டு அதனுள் சிறிது உருளை மசாலாவை வைக்கவும்.
பின்னர் சாப்பிடும் நேரத்தில் அதனுடன் அரைத்து வைத்துள்ள புதினா சட்டினியை ஊற்றி கொடுக்கவும். சுவையான பானி பூரி தயார்.