Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அனைவருக்கும் பிடித்த மாங்காய்….. நன்மை-தீமை தெரியுமா…?

பச்சை மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளின் தொகுப்பு:

  • பச்சை மாங்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின் “சி”, வைட்டமின் “ஏ” மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. இதனால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை ஒன்றிணைந்து நடுநிலையாக்கல் செயல்படுகிறது.
  • ஹீமோபிலியா, ரத்த உறைவு. ரத்தசோகை போன்ற பித்தக் கோளாறுகளை சரி செய்ய மாங்காய் உதவுகிறது.
  • வயிற்றுப்போக்கு, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் கோளாறுகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.
  • மதிய உணவிற்கு பிறகு பச்சை மாங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஊக்கத்தை கொடுப்பதுடன், புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.
  • பச்சை மாங்காய் உடலில் இருந்து சோடியம் குளோரைடு மற்றும் இரும்புச் சத்து அதிகமாக இழப்பதை நிறுத்துகிறது.
  • பச்சை மாங்காய் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் பற்களின் வளத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பற்சிதைவுடன் எதிர்த்து போராடுகிறது.
  • மாங்காய் சாப்பிடுவது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை கொடுக்கும்.

 

  • மாங்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • வைட்டமின் சி அதிகம் இருப்பதால் புதிய இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது.
  • பச்சை மாங்காய் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கிய நன்மையை கொடுக்கிறது.
  • பச்சை மாங்காயில் வைட்டமின் பி3 உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது . இது இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
  • பச்சை மாங்காயை வேக வைத்து சர்க்கரை சீரகம் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சாப்பிடலாம். இதனால் அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால் சோடியம் குளோரைடு மற்றும் இரும்பு சத்து அதிகமாக இழப்பதை தடுக்கிறது.

பச்சை மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:

  • அதிகப்படியான பச்சை மாங்காய் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, அஜீரணம்,  மற்றும் பெருங்குடலில் வலி போன்றவை ஏற்படும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட பச்சை மாங்காய்களை சாப்பிடக்கூடாது.
  • பச்சை மாங்காய் சாப்பிட்ட பின்பு உடனே குளிர்ந்த நீரை குடிக்க வேண்டாம் ஏனெனில் அது எரிச்சலை ஏற்படுத்தும்.

Categories

Tech |