Categories
அரசியல் தேசிய செய்திகள்

அனைவருக்கும் மாதம் ரூ.2000… செம மாஸ் அறிவிப்பு…!!!

அசாமில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இல்லத்தரசிகளுக்கு 2,000 ரூபாய் ஊதிய தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதிலும் சில கட்சிகள் தொகுதி பங்கீடு பற்றிய தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் மாநிலம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்துவருகின்றது.

மேலும் ஒவ்வொரு கட்சியினரும் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகிறார்கள். இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள வடகிழக்கு மாநிலமான அசாமில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். அவர் இல்லத்தரசிகளுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை, வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்ளிட்ட அதிரடி வாக்குறுதிகளை அளித்து அசத்தியுள்ளார். இந்த அறிவிப்பு தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |