Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள்  மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த வாரம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் ஓடவில்லை. அதுமட்டுமன்றி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தகுதியுடைய ஒவ்வொரு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என எம்டிசி அறிவித்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் இடைக்கால நிவாரணத் தொகை 14 வது ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தும் போது பணியாளர்கள் உடைய சம்பள கணக்கில் பின்னர் சரி செய்யப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |