Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் வங்கிக் கணக்கில்…. தமிழக அரசு அறிவித்த சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் மாணவிகளின் கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6-12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த அதற்கான சான்று உள்ளிட்டவற்றுடன் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற்று அதனை சமூக நலத்துறையின் பிரத்தியேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால் சான்றிதழ்களை பெரும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்.சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்றவுடன் அவற்றை சரிபார்க்கும் பணி தொடங்கும்.தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப்படும் ஜூலை 15ஆம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க ஏதுவாக இந்த பணிகளை விரைந்து முடிக்க முயற்சி துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |