தமிழகத்திலிருந்து ஹஜ்பயணம் மேற்கொள்பவர்கள் சென்னையில் இருந்து நேரடியாக செல்ல விமான சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஹஜ் பயணம் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
அதனால் அனைத்து பக்தர்களும் செல்ல முடியவில்லை. இந்நிலையில் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் விண்ணப்பிக்கும் அனைவரும் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஹஜ் பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகின்ற 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.