இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு சேவையை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு 5g சேவையை தொடங்கிய airtel நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இதுவரை 5g சேவையில் 10 லட்சம் பயனர்களைக் கடந்துள்ள ஏர்டெல் மிக விரைவில் அனைவருக்கும் 5G சேவையை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக முக்கிய பெரு நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, நாக்பூர், வாரணாசி, ஹைதராபாத் மற்றும் சில்லி கிரி ஆகிய நகரங்களில் 5G சேவையை ஏர்டெல் அறிமுகப்படுத்தியது.