மாகாரணியின் இறுதிச்சடங்கில் 500-க்கும் மேற்பட்ட நாட்டின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தாணியாவின் மகாராணியான எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால் பல ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இதில் அமெரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, நியூசிலாந்து, இந்தியா, பிரேசில் என 500-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியானது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆனால் ரஷ்யா, பெலாரஸ்,மியான்மர் ஆகிய 3 நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதுடன், ஈரானுக்கு தூதரகம் ஊடாக மட்டுமே மரியாதை செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் முக்கிய ஜனாதிபதி ஜெலேன்ஸ்கிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் லண்டனுக்கு புறப்படும் சூழலில் இல்லை என தெரிவித்துள்ளார். சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் வருகை சந்தேகம் என கூறப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக துணை ஜனாதிபதி பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.