Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை  அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில்  அந்தியூர், பர்கூர், தட்டகரை ஆகிய  பகுதிகளில்  வனசரகம் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில்  வனத்துறையினர்  35 கண்காணிப்பு கேமராக்களை வனப்பகுதியில் பொருத்தி கண்காணித்து வந்தனர்.

இதனையடுத்து  பர்கூர் வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை நேற்று வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது  இரவு நேரத்தில் சிறுத்தை  ஒன்று உணவு தேடி காட்டில் சுற்றி திரிவது பதிவாகியுள்ளது. மேலும் யானை, முள்ளம்பன்றி, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி சுற்றி திரிவதும் கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே மலை கிராம மக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாமல்  வெளியே வரக்கூடாது எனவும், வீடுகளுக்கு முன்பு மின்சார விளக்கை எரிய விட வேண்டும். மேலும்  மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |