நகை கடன் பெற்றவர்களுக்கு கூடிய விரைவில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையில் கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இங்கு நகை கடன் வாங்கியவர்களுக்கு 5 சவரனுக்கு கீழ் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளர்களுக்கு நகை திருப்பிக் கொடுக்கப்பட்டது. இதில் அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதன்பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிகையாளர்களிடம் பேசினார். அதில் இந்த மாத இறுதிக்குள் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். அதன்படி 14,40,000 பயனாளர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது. இதில் யாரேனும் விடப்பட்டு இருந்தால் அவர்கள் எங்கள் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். இதனையடுத்து ஒருவர் நான் ஆட்டோ ஓட்டி வருவதாகவும், ஆனால் அரசு அதிகாரி என கூறி நகை கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறார்கள் என்று எங்கள் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
உடனே நான் அதற்கான நடவடிக்கையை எடுத்து அந்த நபருக்கு நகை கடை தள்ளுபடி செய்து கொடுத்தேன் என்று கூறினார். இதனையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட மாட்டாது எனவும் கூறினார். இதேப்போன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ரத்தினலால் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 கோடி ரூபாய் அளவுக்கு 600 கடன்களை வாங்கி இருக்கிறார். அப்படி கடன் வாங்கியவர்களுக்கும் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது. இது மாதிரியான முறைகேடுகளை களைவதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் தணிக்கை குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு தற்போது முழுமையடைந்தது. மேலும் இதுதொடர்பாக முறைகேடு செய்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.