மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பள்ளியில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அதில் தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார், அலுவலர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் 12-ஆம் வகுப்பு மாணவர்களிடம் இயற்பியல் பாடத்தையும், 7-ஆம் வகுப்பு மாணவர்களிடம் கணக்கீடுகளையும், 10-ஆம் வகுப்பு மாணவர்களிடம் செய்யுள் மற்றும் குரல் மனப்பாடப் பகுதிகளையும் ஒப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக முடிவெட்டியதற்காக ஆசிரியர்களை பாராட்டியுள்ளார். இதனையடுத்து அவர் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் அனைத்து சான்றிதழ்களையும் காலதாமதம் இன்றி உடனுக்குடன் வழங்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.