Categories
மாநில செய்திகள்

“அனைவரும் பார்க்க வேண்டிய பள்ளிக்கரணை பூங்கா”…. ஒரு தடவ போயிட்டு வாங்க…!!!

சென்னை பள்ளிக்கரணையில் சூழல் பூங்காவை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தில் ரூபாய் 20 கோடியில் அமைக்கப்பட்ட சூழல் பூங்காவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த பூங்கா 2.5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கடந்த 1960 ஆம் ஆண்டு 6 ஆயிரம் எக்டர் பரப்பளவில் இருந்தது. அதன் பிறகு நகரமயமாதல் காரணமாகவும், தொழில் மையம், கல்வி நிறுவனங்கள் மென்பொருள் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது 700 ற்கு சுருங்கியது. சதுப்பு நிலப் பகுதியில்  176 வகையான பறவை இனங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நிலநீர் வாழ்வினங்கள், 50 வகையான மீன் இனங்கள், 9 வகையான நத்தை இனங்கள், 5 வகையான ஒட்டு மீன் இனங்கள், 14 வகையான வண்ணத்து பூச்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2020 21 கணக்கெடுப்பின்படி நாற்பத்தி ஒரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு உள்ளதாக கூறப்படுகின்றது. இதனை பாதுகாக்கும் வகையில் 42 வகையான தாவர வகைகள் மற்றும் புல்வெளிகள் அமைவதோடு, நெடுஞ்சாலை சதுப்பு நிலத்தின் எல்லையில் 1700 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து, சதுப்புநிலம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இது சதுப்பு நிலம் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியின் குப்பை மேடாக இருந்த பகுதி முழுமையாக சீரமைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபாதை, தாவர மற்றும் விலங்குகளின் விவரம் போன்றவை இருக்கும், இந்த பூங்கா அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு இடம். நேரம் கிடைத்தால் சென்று பார்த்து வாருங்கள்.

Categories

Tech |