Categories
சினிமா தமிழ் சினிமா

அனைவரும் முணுமுணுக்கும் “அரபிக் குத்து” பாடல்…. இவரின் படத்தை பின்னுக்கு தள்ளி ட்ரெண்டிங்கில் மீண்டும் பஸ்ட்….!!!

பீஸ்ட் படத்தின் ‘அரபி குத்து’ பாடல் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் இப்படம் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது. இப்படத்தில் எந்த ஒரு அப்டேட் வந்தாலும் ரசிகர்கள் அதற்கு பெருமளவில் ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் சமயத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் பான் வேர்ல்ட் அளவில் ஹிட் கொடுத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து எந்த வலைதள பக்கத்திற்கு சென்றாலும் அரபி குத்து பாடலின் வீடியோ தான் முன்வந்து நிற்கிறது.

அந்த அளவிற்கு இப்பாடல் மக்களிடையே சென்றடைந்திருக்கிறது. இந்நிலையில் யூடியூபில் 61 மிலியனுக்கு  மேல் ஐந்து நாட்களில் பார்வைகளை குவித்துள்ளது அரபி குத்து பாடல். இப்பாடல் வெளியானது முதல் நம்பர் ஒன் இடத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி அரபிக் குத்து பாடலை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஆனால் மீண்டும் அரபி குத்து பாடல் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்திற்கு வந்துள்ளது.

Categories

Tech |