Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

” அனைவரும் முன்வர வேண்டும்” நடைபெறும் புத்தகத் திருவிழா…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அரசு சார்பில் 120 நூலகங்களும், கிராம அளவில் 435 நூலகங்களும், நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 1,115 நூலகங்களும் இயங்கி வருகிறது. இந்த நூலகங்களில் வசதிகளை மேம்படுத்த விரும்பும் தன்னார்வலர்கள் வருகின்ற 15-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த புத்தகங்களை தள்ளுபடி விலையில் வாங்கி தாங்கள் தேர்ந்தெடுக்கும் நூலகத்திற்கு  அளிக்கலாம்.

மேலும் இந்த தன்னார்வலர்களை  பாராட்டும் விதமாக அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே நமது மாவட்டத்தில் அமைந்துள்ள நூலகங்களை மேம்படுத்த   தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அந்த அறிக்கையில்  கூறியுள்ளார்.

Categories

Tech |