சிங்கி இறால் செய்ய தேவையான பொருட்கள்:
சிங்கி இறால் – கால் கிலோ
சீரகம் – 1 தேக்கரண்டி வற்றல் தூள் – 2 தேக்கரண்டி
முருங்கை இலை – சிறிதளவு
உப்பு, மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
செய்முறை:
பாத்திரத்தில் சிங்கி இறாலை எடுத்து சுடுநீரில் போட்டு, வைத்து அதன் மேல் ஓட்டை உடைத்து உள்ளே உள்ள பகுதியை எடுத்து கொள்ளவும்.
இறாலை உதிர்ந்து அதனுடன் வற்றல் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீரில் வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முருங்கை இலை,கடுகு, சீரகம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும். சிங்கி இறாலையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.இப்போது சுவையான சிங்கி இறால் தயார்.