ஹோலி பண்டிகை ஆனது இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பவுர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணபகவான் கோபியர்களுடன் விளையாடிய விளையாட்டு தான் இந்த ஹோலி பண்டிகை.
இந்த பண்டிகையானது ராதா, கிருஷ்ணனும் விளையாடிய விளையாட்டை நினைவுபடுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. பிரம்மதேவரிடம் வரங்கள் பல வாங்கிய இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என்று தொழ வேண்டும் என்று எண்ணினான்.
ஆனால் இரணியனின் மகன் பிரகலாதன் அதை எதிர்த்தான். பிரகலாதன் மகாவிஷ்ணு ஒரு கடவுள் என்று பூஜித்து வந்தார். இதை அறிந்த இரணியன் மகன் என்றும் பாராமல் பிரகலாதனை பலவகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என்று கூறும்படி வற்புறுத்தினார்.
ஆனால் பிரகலாதன் மறுத்துவிடவே, இதற்கு ஒரு வழி காண வேண்டிய இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினார். நெருப்பின் தன்மை படைத்தவர் எனவே தன் மகன் பிரகலாதனை அளிக்கும் பொருட்டு, இவளுக்கு உண்டு. இரணியன் பிரகலாதனை மடியில் அமர்த்திக்கொண்டு, ஹோலிகாவே நெருப்பின் நடுவில் அமரச் செய்தார்.
இரணியன் பிரகலாதனைக் கொல்ல பலமுறை முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. இந்த தடவை பிரகலாதன் எப்படியும் நெருப்பில் இறங்கி விடுவான் என்று எண்ணினான் இரணியன். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்த பிரகலாதன் மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பில் இருந்து மீண்டார்.
ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பல் ஆனால். இந்த சம்பவத்தை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகை அன்று வெட்டவெளியில் தீ மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வார்கள். அன்றுதான் மக்கள் ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.
தனது தவத்தை கலைத்த மன்மதனை, தன் நெற்றிக்கண்ணால் அளித்தார் ஈசன். அதன்பின் மன்மதனின் மனைவி ரதி வேண்டிக் கொண்டதற்கிணங்க ஈசன் மீண்டும் மன்மதனை பிரதியைத், ரதியை தவிர வேறு எவரது கண்ணுக்கும் தெரியாதவாறு உயிர்ப்பித்தார்.
மன்மதன் உயிர் பெற்று மீண்டு வந்த நாளை ஹோலி என்றும் கூறப்படுகிறது. மக்களிடையே சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் தெளிக்கவும் உதவும் பண்டிகை தான் ஹோலி. தெரிந்தவர் தெரியாதவர் என்ற பேதம் கூட இல்லாமல் எல்லோரும் கூடிக் களிக்கும் அற்புத விழா தான் இந்த ஹோலி பண்டிகை.